இலங்கை

சங்ககார மற்றும் அவரது அணியின் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு! – மங்கள சமரவீர

நாட்டிற்குப் புகழைத் தேடித்தந்த குமார் சங்கக்கார மற்றும் அவரது அணியின் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்து தொடர்பில் பெரும் சர்ச்சையொன்று எழுந்திருக்கும் நிலையில், எவ்வித ஆதாரங்களுமின்றி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குக் கண்டனங்களும் வலுத்து வருகின்றது.

அந்தவகையில் 2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்திருந்தார். இது தொடர்பிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது இக்குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்ற முன்னாள் அமைச்சர் அதற்கான 9 வருடங்கள் காத்திருந்தமைக்கான காரணம் என்ன? 2011 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவரால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆட்டநிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டு எமது நாட்டிற்கு புகழையும், மகிமையையும் பெற்றுத்தந்த குமார் சங்கக்காரவினதும் அவரது அணியினரதும் நேர்மையின் மீது ஏற்படுத்தப்படும் மிகமோசமான அவதூறாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கருத்து தெரிவிக்க