உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்தே தெரிவுக்குழு-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்தே தெரிவுக்குழு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

” ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்துக்குமிடையில் முரண்பாடு உருவாகியுள்ளது. எனவே, இன்று அமைச்சரவையும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது,  அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டுவருகின்றது. இதை அறிந்ததால்தான் தெரிவுக்குழு தேவையில்லை என்ற கருத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.

அத்துடன், தெரிவுக்குழு விசாரணை ஊடாக ஒரு சிலருக்கு வெள்ளையடிப்பு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்படுவதாலேயே விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மறுப்பு தெரிவித்தது.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியில் வேட்டையாடும் நோக்கிலேயே தெரிவுக்குழுவின் விசாரணைகள் நகர்ந்துக்கொண்டிருக்கின்றன.” என்றார் தயாசிறி ஜயசேகர.

கருத்து தெரிவிக்க