ஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை பதன்கோட் விரைவு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பஆட்டு கைது செய்யப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நிர்வாக எல்லைக்குட்பட்ட காஷ்மீரின் கதுவா நகரின் வனப்பகுதியில் இருந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. குறித்த சிறுமி அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என நம்பப்படும் முன்னாள் அரச அலுவலர் உட்பட மூவருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் போதியளவு ஆதாரம் இல்லையென தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க