விளையாட்டு செய்திகள்

‘கோபா அமெரிக்க’ கால்பந்து தொடரில் நெய்மர் இல்லை

பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ‘கோபா அமெரிக்க’ கால்பந்து தொடரில் இருந்து விலகினார்.

எதிர்வரும் 14ம் திகதி முதல் ஜூலை 7ம் திகதி வரை ‘கோபா அமெரிக்க’ போட்டியின்  46 வது தொடர் பிரேசிலில் இடம்பெறுகின்றது.

இதில் ஆர்ஜென்டினா, கொலம்பியா நடப்பு செம்பியன் சிலி உள்ளிட்ட 10 தென் அமெரிக்க நாடுகளும் கட்டார், ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும் பங்குபற்றுகின்றன.

இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் மற்றும் கட்டார் அணிகள் சர்வதேச போட்டியில் விளையாடின இதில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்தது.

இந்த போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஏற்பட்ட காயத்தினால் அவர் வெளியேறினார். இதன் காரணமாகவே அவர் ‘கோபா அமெரிக்க ‘போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

கருத்து தெரிவிக்க