சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஹல்துமுல்லை- பம்பரக்கந்த நீர்வீழ்ச்சி பகுதியில் 1500 மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு, கமத்தொழில் கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து லங்கா ஹதபிம அதிகாரசபையின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்கு ஹல்துமுல்லை பிரதேச சபை மற்றும் இலங்கை இராணுவ படை
தலைமையகம் பங்களிப்பு வழங்கி இருந்தன.
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்த அருகில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
கருத்து தெரிவிக்க