சர்ச்சைக்குரிய சவுதி நாட்டவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் சவுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி நாட்டவர்கள் சிலரை பாசிக்குடா நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்த காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கல்முனை மற்றும் காத்தான்குடி பகுதிகளை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.
சவுதி நாட்டவர்களை சந்தித்த மற்றும் அவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்த, மொழி பெயர்ப்பு செய்தவர்களிடமே இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இவர்கள் வழங்கிய வாக்குமூலங்களுக்கு அமைய சவுதி நாட்டவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் சவுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க