ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் இன்றைய தினம் காலை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாகவும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வாவி கரையோரம் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றன.
ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ரோகண அபேரத்ன முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இராணுவ படை வீரர்கள் பொதுமக்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் உடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தனர்
இதேவேளை இன்று காலை வேளையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் உடைய வட்டுவாகல் கடல்நீரேரியின் ஓரமாக கடற்படை மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் உடைய மேலதிக செயலாளர் ரோகண அபேரத்ன முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் உள்ள நந்திக் கடல் ஓரமாக மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றுள்ளது
கருத்து தெரிவிக்க