யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது
பொலிசாரால் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்றத்தில்இருந்து தப்பி ஒடியுள்ளார்.இதனை அடுத்து குறித்த சந்தேகநபரை பொலிசார் தேடிவருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவினை நீதவான் பிறப்பித்து உள்ளார்
கருத்து தெரிவிக்க