உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயிர்த்த ஞர்யிறு தின தாக்குதல் தொடர்பில் CID நீதிமன்றில் விளக்கம்

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புப் புலனாய்வுத் திணைக்களம் இன்று பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டும் சட்ட திணைக்களத்தின் ஆலோசனைகளின்படி, இதற்கு முன்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற பாதுகாப்பு தகவல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் பீ அறிக்கையொன்றின் ஊடாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க