அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய போதிலும் நாடாளுமன்றத்தின் பின்வரிசை ஆசனங்களில் அமர்வதாகக் கூறிய முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று முன்வரிசையிலேயே அமர்ந்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த வேளையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த முன்வரிசை ஆசனத்திலேயே அமர்ந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இதுகுறித்து அவையில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, அவர் கட்டியினுடைய தலைவர் என்ற ரீதியில் அவருக்கு முன் ஆசனம் வழங்கப்பட்டதாக கூறினார்.
என்றபோதிலும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தாங்கள் பதவிகளிலிருந்து விலகுவதாகக் கூறப்பட்ட போதிலும் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க