சீனாவின் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர்களின் ஜனநாயக போராட்டம் நசுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன.
ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என்று கோரி தியானன்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு மாணவர்கள் இதே நாளில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அப்போராட்டங்களை நசுக்க சீனா தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தியது.
சீன ராணுவம் தியானன்மென் சதுக்கத்தில் நுழைந்து மாணவர் போராட்டத்தை அகற்ற முற்பட்டது. மாணவர்கள் மீது இரக்கமின்றி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன.
போராட்டத்திற்கு பிறகு, 1989ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் சீனா வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4ஆம் திகதி நடந்த போராட்டத்தில் பொதுமக்களில் 200 பேர் இறந்ததாகவும், பல பாதுகாப்பு அதிகாரிகள் இறந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனினும் குறித்த போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, 2017ம் ஆண்டு வெளியாகிய பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவித்தன.
தியானன்மென் சதுக்க போராட்டம் நினைவு கூரப்படுவதை சீன அரசு விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க