அழகு / ஆரோக்கியம்

வெள்ளி நகைகள் தரும் நன்மைகள்

பெண்கள் நகை அணிவது பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. அழகிற்காக அணியப்பட்டது என்பதை கடந்து அவை ஆரோக்கிய காரணங்களை கொண்டது என சமீபத்தில் வெளியாகும் மருத்துவ தகவல்களால் பூரிப்படைந்து நகை விரும்பாதவர்களும் அணிய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் வெள்ளி நகைகள் தரும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அதிக முத்துக்களை கொண்ட கொழுசு அணிந்து விடுவதால், அவர்கள் உள்ள இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

வெள்ளி நகை அணிந்துகொள்வதினால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும், இரத்த நாளங்கள் மற்றும் எலும்பின் வலிமைகளை அதிகரிக்கிறது, மேலும் உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது.

அனைத்து நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், கொலுசை மட்டும் தங்கத்தில் அணிவதில்லை, அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தங்கத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால், அதனை காலில் அணியக்கூடாது என்பது ஐதீகம். இதனால் தான் காலில் அணியும் எல்லா நகைகளும் வெள்ளியில் அமைகிறது.

கருத்து தெரிவிக்க