Uncategorizedவடக்கு செய்திகள்

‘முசலி-கல்லாறு வீட்டுத்திட்டம் அரச காணியிலேயே அமைந்துள்ளது’

முசலி – கல்லாறு ஹீனைஸ் நகர் பகுதி வீட்டுத்திட்டம் அமைந்துள்ள காணியானது அரச காணி என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் மேற்படி திட்டமானது இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில்அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தில் 65 வீடுகளுக்கான காணிகளுக்கான அனுமதிப்பத்திரம்  வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 22 வீடுகளுக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவிருக்கிறது  எனஅவர் மேலும்
தெரிவித்தார்.

அத்தோடு  வீட்டுத்திட்ட பணி இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக  அமைச்சர் சஜீத் பிரேமதாஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அமைச்சர், மீண்டும் வீட்டுத்திட்ட பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார் என சந்திப்பில் கலந்து கொண்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முசலியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டமக்கள் இல்லாத வீடுகளில் மக்களை வந்து குடியமர இரண்டு வார கால அவகாசம் வழங்கவுள்ளதாகவும், குறித்த காலத்தினுள் வந்த குடியமராது விட்டால் குறித்த வீடுகளை பறிமுதல் செய்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளதாக முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இதன் போது தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க