உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்ன தேரர் சற்றுமுன்னர் கண்டி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் ஆளுநர் பதவியில் இருந்த விலக வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த ஆளுநர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து உடல்நிலை மோசமான காரணத்தால் அவர் சற்றுமுன்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கருத்து தெரிவிக்க