உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

அத்துரலியெ ரத்தனதேரருக்கு மலையகப்பகுதிகளில் ஆதரவு

உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அத்துரலியெ ரத்தன தேரருக்கு நுவரெலியா  உட்பட சில மலையகபகுதிகளில் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இன்று பகல் 12.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான தபாலகத்திற்கு முன்பாக பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நுவரெலிய மக்கள் ஒத்துழைப்பு ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கூட்டத்தில் அனைத்து இனங்களை சார்ந்த பொது மக்கள், பௌத்த மத தலைவர்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த மத தலைவர்கள், அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய மூவரையும் அவர்களுடைய பதவிகளில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலக்க வேண்டும் எனவும் அவர்களுக்கான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் எனவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை ஹட்டன் பண்டாரவளை உட்பட மலையகத்தின் முக்கிய சில இடங்களிலும் கடைகள் மூடப்பட்டு ரத்தன தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க