கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை பார்வையிடச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்டியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக அங்கிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் அந்த இடத்திற்கு அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அந்த இடத்திற்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவிற்கு எதிராகவும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதன் காரணமாக அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க