அமெரிக்கா விசாவினைப் பெற விண்ணப்பிப்பவர்கள் சமூகவலைத்தள விபரங்களை அளிக்க வேண்டும் என அமெரிக்கா புதிய நடைமுறையை விதித்துள்ளது.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1½ கோடிக்கும் மேற்பட்டோருக்கு விசா வழங்கி வரும் நிலையில் இந்த தொகையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா பெறும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், புதிய நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சமூக வலைத்தளங்களில் தனது 5 ஆண்டுகால செயற்பாடுகளை விளக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பேஸ்புக், ப்ளக்கர், கூகுள், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், யூ டியூப் போன்றவற்றின் செயல்பாடுகள் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபரின் 5 ஆண்டுகால பின்னணி ஆராயப்படும்.
இனி வரும்காலங்களில் விசா விண்ணப்பம் செய்வோர் தாங்கள் 5கடந்த ஆண்டுகளில் பயன்படுத்திய சமூக வலைத்தளங்கள் அடிப்படையில் விசா நேர்காணல் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இந்த பதிலில் தூதரக அதிகாரிகள் திருப்தி அடையவில்லை எனில் அவர்களுக்கு விசா விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமை உண்டு.
இந்த விதிமுறைகள் மாணவர் மற்றும் பயணிகள் விசாவுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க