கிழக்கு மாகாண ஆளுனரின் நியமனத்தை இரத்துச் செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்காக வேண்டி ஒரு இலெட்சம் கையொப்பங்களைச் சேகரிக்கும் கையெழுத்து வேட்டை மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில சனிக்கிழமைஇடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு ஆளுனராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் நியமனத்தைச் இரத்துச் செய்யவேண்டும், அவர் கடந்த காலங்களிலும், தற்போதும் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் செயற்பட்டு வருகின்றார். எனவே இவ்விடையத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். என இதன்போது கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தமிழ் உணர்வாளர்கள், அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கையெழுத்து வேட்டையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மற்றும் பொதுக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டனர்.
கருத்து தெரிவிக்க