இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று மஹிந்த ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே வலியுறுத்தினார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ 21/4 தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்புகூறவேண்டும். எனினும், பொறுப்புக்கூறலிலிருந்து விலகி நிற்கவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
பாதுகாப்பு தரப்பினர் சிறப்பாக செயற்பட்டதால்தான் நாட்டின் பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் குறித்து நாம் விழிப்பாகவே இருக்கவேண்டும்.
எனவே, தேசிய தௌஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பை வைத்திருந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் சிந்தனை மாற்றம் உதயமாகும்.
தீவிரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படவேண்டும். ஏனையோருக்கே புனர்வாழ்வுத் திட்டம் பொருந்தும். ” என்றும் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க