உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ராஜித்தவுக்கு – எச்சரிக்கிறது எதிர்க்கட்சி

சுகாதார, போஷாக்கு மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
குருணாகல் வைத்தயிசாலையின் கருத்தடை சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் சாஃபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமை, நெவில் பெர்ணான்டோ வைத்தயிசாலையை சட்டப்பூர்வமாக கையகப்படுத்தாமல் அதற்கு அரச நிதியினை செலுத்தியமை உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் பலவற்றை உள்ளடக்கியே அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கட்சித் தலைவர்கள் சிலர் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிசார்ட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எடுக்கவுள்ள தீர்மானத்தை அடுத்தே இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க