அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஆண்கள் காற்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய ஆடையை அணிந்து கடமைக்கு வரவேண்டும் என்பதுடன், பெண்கள் சாரி அல்லது சிங்கள முறையிலான ஒசரி கட்டி வரவேண்டுமென அமைச்சின் செயலாளர்கள், உள்ளுராட்சிமன்ற பிரம செயலாளர்கள், அரச திணைக்கள பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரச உத்தியோகத்தர்களின் ஆடை அணிகள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் கர்ப்பிணிப் பெண்கள் கடமைக்கு வரும் போது அவர்களுக்கு வசதியான முறையில் ஆடைகளை அணிய முடியுமென அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சமய சுற்றுநிருபத்திற்கு அமைய தமது ஆடைகளை அணிவோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் முழுமையாக தமது முகத்தை அடையாளம் காணக்கூடிய விதத்தில் பிரிதொரு ஆடையொன்றை பயன்படுத்திக் கொள்ள முடியுமென அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க