ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 15 அல்லது டிசம்பர் 07 ஆம் திகதி கட்டாயம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்தார்.
“ நாட்டில் குண்டுவெடித்தது என்பதை காரணம்காட்டி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. அதற்கு தேர்தல் ஆணைக்குழு இடமளிக்காது.
1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இதைவிடவும் பயங்கரமான சூழ்நிலை நிலவியது. எனினும், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு, டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் முன்னர் கட்டாயம் நடத்தப்படவேண்டும்.
முன்கூட்டியே நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15 ஆம் திகதியும், இறுதியில் நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7 ஆம் திகதியும் நடத்த முடியும். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு அறிவித்துவிட்டோம். எனவே, எவரும் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது.’’ என்றும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க