இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான அரசியல் முடிவுகளை எடுக்கவுள்ளார் என சுதந்திரக்கட்சி வட்டாரங்களிலிருந்து இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன..
இந்த முடிவுகளானவை தெற்கு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைப்பீடம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முதல் அமர்வு நடைபெற்று முடிந்த பின்னர், அன்றிரவே பிரதமருக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி, கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி தீர்க்கமான அரசியல் முடிவுகளை எடுக்கவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க