விசாரணைகளுக்கு இடம்தரும் வகையில் அமைச்சர்; ரிசாத் பதியுதீன் பதவிவிலக வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் அமைச்சுப்பதவியில் தொடர்ந்தால் விசாரணைகளில் செல்வாக்கை செலுத்தலாம் என்ற தோற்றம் உண்டாகும்.
எனவே உடனடியாக பதவிவிலகவேண்டும். என்று ரணவக்க கேட்டுக்கொண்டார்.
இதேவேளை உயிர்;த்த ஞாயிறுத்தாக்குதல்கள் குற்றவியல் தொடர்பான குற்றச்சாட்டுக்களாகும்.
எனவே அது தொடர்பில் நாடாளுமன்றக்குழு விசாரணைகளை நடத்தமுடியாது.
அதனை காவல்துறையும் புலனாய்வுத்துறையுமே மேற்கொள்ளமுடியும்.
இதற்கிடையில் தமது பதவியைக்கொண்டு முஸ்லிம்களை பாதுகாக்கமுடியும் என்று அசாத் சாலி கூறுவாராக இருந்தால் அது ஏற்புடையது அல்ல. அவர் ஜனாதிபதியினால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த அரசியல்வாதிகள் தமது வாயைப்பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் ஊடகங்களுக்கு தமது சாணக்கியத்தை காட்ட முயலக்கூடாது என்றும் ரணவக்க தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க