இலங்கை

பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று முன்னொடுப்பு.

பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றிகரகமாக நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒத்திகை 200 வாக்காளர்களை மையப்படுத்திய பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பாக  முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஒத்திகையின் போது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த பல காரணிகள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ள போதும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள்படி தேர்தலை முன்னொடுப்பதற்கு கால அவகாசம் இல்லை எனவும் ஆணைக்குழு கருதுவதாக தெரிகிறது.

கருத்து தெரிவிக்க