பிரித்தானியாவின் “எஸ்ஏஎஸ்” சிறப்பு வான் சேவை படைப்பிரிவு, ஐஎஸ்ஐஎஸ் தலைவரான அபு அல் பக்டாடியை “உயிருடன் பிடிப்பது அல்லது கொல்வது” என்ற அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
பிரித்தானிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்களில் பலர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கைகளுக்காக பிரித்தானியாவினால் எஸ்ஏஎஸ் படைப்பிரிவு 1941ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஈராக்கின் அன்பார் பாலைவனப் பகுதியிலேயே வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது.
இந்தநிலையி;ல் பக்டாடியை கொல்லும் நடவடிக்கையில் எஸ்ஏஎஸ் படைப்பிரிவின் 30 வீரர்களும் விசேட படையினரும் ஈராக்கின் படையினரின் தலைமையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்நிமித்தம் 24 மணித்தியால கண்காணிப்பு பணிகளும் ஈராக்,சிரியா மற்றும் துருக்கிய ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் எஸ்ஏஎஸின் நடவடிக்கை குறித்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
கருத்து தெரிவிக்க