உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

ஆட்சியை அமுல்படுத்துவதில் இளைஞர் யுவதிகளின் வகிபாகம் முக்கியம்- நவேஸ்வரன்,

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதில் இளைஞர் யுவதிகளின் வகிபாகம் மிகவும் பிரதான இடத்தை வகிக்கின்றது.
அரசியலமைப்பின் படி சட்டத்தின்பால் இளைஞர் யுவதிகளின் வகிபாகம் முக்கிய இடம் வகிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பல அமைப்புக்கள் இருக்கின்றன.
ஆனாலும் இந்த அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு ஒரு வித்தியாசமான நீண்ட தூர நோக்குடன் இளைஞர் யுவதிகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.
சட்டத்தின ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகளுக்குமைய பல்வேறு சரத்துக்கள் உள்ளன. வெகுஜன ஊடகத்துறை, மனித உரிமைகள், தகவலை அறிவதற்கான உரிமைகள், இவ்வாறான வாய்ப்புக்களை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கான களத்தையும், அதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த நிலையம் உருவாக்கப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். என மட்டக்களப்பு கச்சேரியின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு” அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யவதிகளின் ஆளுமை விருத்தி மற்றும் நவீன தொழில் நுட்பத்தை விருத்தி செய்வதற்ககாக வேண்டி அதற்கான காரியலயம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கண்ணகியம்மன் கோயில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு கச்சேரியின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், உரையாற்றினார்.
தற்போது இந்நாட்டில் இருக்கின்ற சூழ்நிலையில் நல்லாட்சிப் பொறிமுறையில் நாட்டிலுள்ள சகல இன மக்களும் சகோதர இன மனாப்பாங்குடன் வாழ்வதற்கான, அரசாங்க பொறிமுறையை நாங்கள் அனைவரும் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகளும் இன்றியமையாததாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க