புதுக்குடியிருப்பு தேராவில் நஞ்சுண்டான் குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பார்வையிட்டார்
குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு வளவள திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் வரக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்து குறித்த குளத்தை புனரமைத்து தொடர்பில் இந்த விஜயம் அமைந்திருந்தது
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலம் மக்கள் கோரிக்கை விட்ட விவசாய பிரச்சனை ஒன்றிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேராவில் கிராமத்தில் உள்ள நஞ்சுண்டான் குளம் புனரமைப்பிற்கான 40 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வனவளத்திணைக்கள மாவட்ட அதிகாரிகள்,பிரதேச செயலக அதிகாரிகள்,கமலநலசேவைகள் திணைக்கள அதிகாரிகள் கிராம மக்கள் என சென்று பார்வையிட்டுள்ளதுடன் குறித்த குளத்தினை கட்டுவதற்கு அங்குள்ள காடுகளை இனம் கண்டு அழிப்பது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டுள்ளதுடன் குறித்த குளத்தினை கட்டுவதற்கான திட்டமிடலினையும் மேற்கொண்டு அதற்கான பணிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் எட்டாம் திகதி ஜனாதிபதி அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதர இருப்பதாக மாவட்ட செயலம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு நேரடியாகவும்,வடக்கு கிழக்கு இணைந்த செயலணி கூட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் பௌத்த மயமாக்கல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதையும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்பகுதியினை சேர்ந்த ஆயிரம் மீனவ படகுகள் வந்து மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் எந்த அனுமதியும் இன்றி அவர்களின் கடற்கரையில் வலுக்கட்டாயமாக தடைப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்
எனவே மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளான தொல்பொருள் திணைக்களத்தின் பிரச்சனை,மகாவலி எல்வலய பிரச்சனை,தென்பகுதிமீனவர்களின் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்குரிய தீர்வை வழங்குகின்றவகையில் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் செய்யவேண்டும் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க