இந் நிலையில் இருவரதும் வழக்கு விசாரணைகளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இனி நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்திடத் தேவையில்லையெனவும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களை வழிமறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது,ஆர்ப்பாட்டத்தில் அரச சொத்துகளைச் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டில், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை கைதுசெய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகளையடுத்து து.ரவிகன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.
மேலும் இருவரும், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுவரையில் இருவரும் வழக்கு விசாரணைகள் தவணையிடப்படும் திகதிகளில் வழக்கு விசாரணைகளுக்கும், மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்தும் இட்டு வந்தனர்.
இந் நிலையில் மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இருவரும் கையெழுத்திடவேண்டும் என்ற உத்தரவை நீதிபதி நீக்கியதுடன், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்து தெரிவிக்க