இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை சுவிட்சர்லாந்து தளர்த்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பெக்டர் மொக் இதனை இன்று அறிவித்துள்ளார்
எனினும் இலங்கைக்கு வரும் தமது நாட்டு பொதுமக்கள், அதியுச்ச அளவில் தமது சொந்தப் பாதுகாப்பை கருத்திற்கொள்ளவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் இன்று மாற்றியுள்ளது.
அதில் இன்னும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான அச்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நீங்கள் இலங்கைக்கு பயணம் செய்தால், உங்கள் சொந்தப் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு பரிந்துரை செய்கிறோம். அரசியல் மற்றும் சமூக பதற்றங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம்.
2019ஆம் ஆண்டு டிசம்பரில் தேசிய தேர்தல் ஒன்று வரையில் அரசியல் பதற்ற நிலை தொடரும்.அத்துடன் நாடளாவிய ரீதியில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான அச்சமும் உள்ளது” என்று அந்த பயண அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு வந்தால், வரும் முன்னர் ஊடகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் தகவல்களை தெரிந்துக்கொள்வது சிறந்தது.
அத்துடன் இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்களை தவிர்ப்பதும் நல்லது என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமது இலங்கைக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க