உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐ.எஸ்.இன் இராணுவத் திட்டம் கண்டுபிடிப்பு! – 88 கொழும்பு வரைபடங்கள் 106 இராணுவச் சீருடைகள், 2 சௌதி ஆடைப் பொதிகள் மீட்பு

இராணுவ தேடுதல் குழு கொழும்பை அண்டிய பிரதேசமொன்றில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐ.எஸ். அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளை கண்டுபிடித்துள்ளது.
மேலும் கொழும்பின் சில பகுதிகள் அடங்கிய 88 வரைப்படங்கள், 106 இராணுவ டி-சேர்ட்கள், சௌதி அரேபிய ஆடைகள் அடங்கிய 2 பொதிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் ஐ.எஸ் அமைப்பின் இராணுவத் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்பதுடன் இந்த பொருட்களை வைத்திருந்தவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க