இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்றுமுடிந்த தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க., மோடியின் பதவியேற்பு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வந்தன. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்நிலையில் மும்பைக்குச் செல்லும் ரஜினி, பெரும்பாலும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து உறுதிமொழிகள் வழங்கப்படவில்லை என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பா.ஜ.க.வின் வெற்றியையடுத்து நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க