ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு துணை போகவேண்டாம் என்று பௌத்த பிக்கு ஒன்று சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்லே குணவன்ச தேரர் இந்தக்கோரிக்கையை சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேராவிடம் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த வருட இறுதியுடன் முடிவடைகிறது.
எனினும் ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம வரை பிற்போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் ஒரு கட்டமாக உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் சட்டமா அதிபரே இதற்கான ஆவணங்களை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையிலேயே எல்லே குணவன்ச தேரர் சட்டமா அதிபரிடம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்தக்கடிதத்தில் பொதுமக்களின் சக்தியே உண்மையின் வியாக்கியானம் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க