இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால், முஸ்லிம் தரப்பினர். விட்டுக்கொடுப்புக்களுடன் பொது இணக்கம் ஒன்றுக்கு வரவேண்டியது அவசியம்.
இந்தக்கருத்தை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வெளியிட்டுள்ளார்.
ஊடகன் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் அவர் இந்தக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகியுள்ளது.
அதனை ஏற்படு;த்துவதற்கு விட்டுக்கொடுப்புக்கள் அவசியம்.
கிழக்கின் பல்வேறு இடங்களில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோதும் கூட தமிழர் தரப்பு முஸ்லி;ம்களுடன் இணங்கிச்செல்லவேண்டும் என்பதில் அக்கறைக் காட்டி வந்திருக்கிறது.
எனினும் முஸ்லிம் தரப்பில் இருந்து இதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கையில் எந்த இனமும் மற்றும் ஒரு இனத்தை பகைத்துக்கொண்டு அல்லது அழித்துவிட்டு முன்னேற முடியாது.
ஏற்கனவே 30 வருடப்போரில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்காக எவ்வித குரல்களையும் கொடுக்கவில்லை.
தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது முஸ்லிம் தலைமைகள் முதலைக்கண்ணீர் கூட வடிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதையும் அவர் இதன்போது நினைவூட்டினார்.
எனினும் முஸ்லிம் பாதிக்கப்பட்டவேளையில் தமிழர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன
.
இந்தநிலையில் கிழக்கில் உள்ள ஒரு பிரிவு முஸ்லிம் தலைவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றனர்.
இது எந்தளவுக்கு யதார்த்தம் என்பது அவர்களுக்கே புரியாமல் உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றபோது தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் எம்மால் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.
எனவே கிழக்கின் முஸ்லிம் தலைமைகள் விட்டுக்கொடுப்புடன் இணக்கம் ஒன்றுக்கு வரவேண்டும்.
அத்துடன் கிழக்கில் இந்த இரண்டு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பொது அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
இதற்கு மதத்தலைவர்கள் முன்னின்று செயற்படமுடியும்
இல்லையேல், கிழக்கில் நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்வதை தடுக்கமுடியாது என்றும் வியாழேந்திரன் ஊடகன் இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க