இந்தியப் பொதுத்தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை 8 மணிக்கு இந்தப் பணிகள் ஆரம்பமாகின.
இந்தநிலையில் 4 மாநிலங்களில் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
542 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல்கள் 7 கட்டங்களாக இடம்பெற்றன.
இதற்காக 8000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
உத்தரபிரதேஸ், பீஹார், மேங்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் வன்முறைகள் ஏற்படக்கூடிய அச்சம் இருப்பதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் எச்சரித்துள்ளது.
இதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களின்படி பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 302 ஆசனங்களில் வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணிக்கு 122 ஆனசங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க