இலங்கையில் குழப்பமாக உள்ள நான்கு பிரச்சனைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இல்லையேல், உள்ளுரில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மீண்டும் தாக்குதல் வாய்ப்பை இந்தக்குழப்பநிலை பெற்றுக்கொடுக்கும் என்று இந்திய இணையத்தளம் ஒன்று எதிர்வுக்கூறியுள்ளது.
இதில் முதலாவது பிரச்சனையாக பெரும்பான்மையினரால் வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் வியாபாரத்தளங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
இரண்டாவதாக, 225 பேரைக் காவுக்கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்கமுடியாது போனமை காரணமாக பொதுமக்கள் மத்தியில் படையினர் மீதுள்ள நம்பிக்கை குறைந்துள்ள விடயம் அமைந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை வைத்துக்கொண்டு உள்ளுர் அரசியல்வாதிகள், தமது எதிரிகளை அரசியல் ரீதியாக தாக்குகின்ற சம்பவம் மூன்றாவது இடத்தைப்பிடித்துள்ளது.
இந்த அரசியல் முறுகல் காரணமாக உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களின் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாத நிலை ஏற்படும்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இலங்கையில் “விலாயத”; என்ற “செய்லானி” மாகாணத்தை அல்லது கலீபா மாகாணத்தை அமைக்க திட்டமிட்டனர் என்ற தகவலே நான்காவது இடத்தில் உள்ளது.
எனவே இந்த நான்கு குழப்பங்களுக்கும் இலங்கை அரசாங்கம் உடனடியான தீர்வைக்காணவேண்டும்.
இல்லையேல் மீண்டும் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்துவிடும் என்று இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதனையே கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பட்ட நிலைமையை பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமையை இந்திய இணையத்தளம் தமது செய்திக்காக கோடிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க