உயிர்த்த ஞாயிறுத்தாக்குல்களுக்கு பழித்தீர்க்கும் வகையில் மினுவாங்கொடையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவரை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறையினர் இதனை அறிவித்துள்ளனர்
இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மினுவாங்கொட நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அதில், பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த வன்முறை வேளையில் தமது வாகனத்துடன் அந்த இடங்களில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரையும் அவருடைய 10 சகாக்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க