மாகாண சபைத் தேர்தலை சிறு திருத்தங்களுடன் பழைய முறைப்படியே நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை எந்த அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் தேர்தலை நடத்தலாம் என கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து சிறு திருத்தங்களைச் செய்து எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டார்.
பழைய தேர்தல் முறைமையில் நடத்த எப்படியான திருத்தங்களைச் செய்வது என்பது குறித்து அமைச்சர்களான மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிப்படையாமல் இருக்க சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என மேற்படி இரு அமைச்சர்மாரும் வலியுறுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க