இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

நேற்று (மார்ச் 21) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதோடு குறித்த பகுதியிலிருந்து 06 பரள்கள் கோடாவும் கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க