நேற்று (பெப்ரவரி 09) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனரென தெரிவித்திருந்தார்.
அத்தோடு கால்நடை தீவனமான மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க