இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான அறிவிப்பு

கடந்த செப்டெம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (ஜனவரி 23) வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான கால அவகாசம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் ஜனவரி 27ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையத்தின் மூலம் சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க