பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவின் விலையை அதிகரிக்க பாராளுமன்ற சபைக் குழு நேற்று (ஜனவரி 23) தீர்மானித்துள்ளதாக புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் காலை உணவின் விலை 600 ரூபாவாகவும் மதிய உணவின் விலை 1,200 ரூபாவாகவும் ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விலைகளை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க