அஸ்வெசும பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கிணங்க வறிய குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் 15,000 ரூபாய் 17,000 ரூபாவாகவும் 8,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பத்திற்கு 10,000 ரூபாவாகவும் அஸ்வத் கொடுப்பனவு அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 2,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க