சிறைச்சாலையிலுள்ள இந்து கைதிகள் தொடர்பில் சிறைச்சாலைத்திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படவுள்ள தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து கைதிகளினது உறவினர்களால் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு, இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவற்றை சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் அனைத்து சிறைச்சாலைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க