உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

பாதுகாப்புக்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் நாளை (20.05.2019) இடம்பெறவுள்ளது

இந்தநிலையில் சுமார் ஆயிரம் வரையான காவல்துறையினர்; பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


இராணுவத்தினரும் ஆலயத்துக்கு உள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆலய வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்;

.
நாளை இடம்பெறவுள்ள பொங்கல் உற்சவத்துக்காக பல லட்சம் அடியார்கள் வரை வருகைத்தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உணவகங்கள், குளிர்பான அகங்கள்; மற்றும் கச்சான் விற்பனை அகங்கள்; ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.


அடியார்கள் எவ்வித அச்சமுமின்றி; தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நாளைய பொங்கல் விழாவுக்கு வரும் அடியார்கள் தமது அடையாள அட்டைகளை எடுத்துவருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தூக்குக் காவடிகளை வெளியில் இருந்து கொண்டுவருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆலய உள்வளாகத்தில் மட்டும் தூக்குக் காவடி நேர்த்தியை மேற்கொள்ளலாம் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க