இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹட்டன் பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

கடந்த டிசம்பர் 21ம் திகதி ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 51 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தை செலுத்திய நாவலப்பிட்டி நவ திஸ்பனையில் வசிக்கும் பிரஷாசன்ன பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க இன்று (டிசம்பர் 26) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரஷாசன்ன பண்டாரவை எதிர்வரும் ஜனவரி 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க