உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஞானசாரரை மைத்ரி சந்தித்தார்- தகவல்கள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாக பூரணைத்தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த தடவையும் பலர் இந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை.

இது பௌத்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படு;த்திவிடக்கூடாது என்பதற்காகவே இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்கர்கள் ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரியிருந்தனர் என்பதும் இங்கு குறி;ப்பிடத்தக்கது.

எனினும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தற்போது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற நிலையில ஞானசாரரை விடுவிப்பது, சாத்தியமல்ல என்ற அடிப்படையிலேயே அவர் பொதுமன்னிப்பின்கீழ் விடுவிக்கப்படவி;ல்லை என்று கருதப்படுகிறது.

கருத்து தெரிவிக்க