தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க கொழும்பு, கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க