தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
அதற்கிணங்க பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை கிடைக்கப்பெறாதவர்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனுமொன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க