நேற்று (நவம்பர் 06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காதவர்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள், தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்குரிய நீதி வழங்கப்படுமெனவும் நியாயமான காரணங்களின்றி அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்பே தயாரித்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க